Wednesday, July 29, 2015

கலாம் சார் !



ஒரு இஸ்லாமிய மனிதனக்கு, இந்து மதக் கடவுள்களின் புகைப்படங்களை விற்கும் ஒரு அங்காடியின் வெளியே, ஒரு ஐயர், அந்த மனிதனின் புகைப்படத்தை வைத்து, மாலையிட்டு, விளக்கு ஏற்றி இரங்கல் தெரிவிக்கிறார். அதே மனிதனுக்காக, ஒரு கிறிஸ்துவ ஆலயத்தின் வெளியே, மெழுகுகள் ஏற்றப்பட்டு பிரார்த்திக்கப்படுகின்றது. அதே மனிதனுக்காக ஒரு இஸ்லாம் கல்லூரியில், இரங்கல் கூட்டம் நடைபெறுகின்றது. அதே மனிதனுக்காக வழி நெடுகிலும், இரங்கல் பதாகைகள், சுவரொட்டிகள்; இப்படிக்கு, இவண், என்ற இடத்தில் மட்டும் கட்சியின் பெயரோ , உறவினர்களின் பெயரோ, சாதியின் பெயரோ இல்லை, வெவ்வேறு வார்த்தைகள். கீழத்தெரு மக்கள், கங்கா ஸ்வீட்ஸ் , அசோக் மற்றும் நண்பர்கள், இன்னும் பல ... இவை எல்லாம் எப்படி ஒரு மனிதனால் சாத்தியமானது ??? அதுவும் அவன் இறப்பிற்கு பிறகு ? உண்மையான உள்ளம் கொண்டு ஒருவன் பழகினால், எளிமையின் பின் நடந்து சென்றால், அறிவில் மிகுந்தாலும் அடக்கம் கொண்டால், பிள்ளை மனம் கொண்டு பிள்ளைகளோடு உறவாடினால், அனைவரையும் சமமாக மதித்தால், நிறம் , இனம், மதம் தாண்டி மனிதர்கள் அவனைத் தன்னுள் ஒருவனாக நினைப்பார்கள்; பெருமிதம் கொள்வார்கள்; உள்ளத்திலிருந்து கண்ணீர் சிந்துவார்கள். தலைவன் என்பவன் தன்னோடு நடந்து செல்பவன்; தன்னைச் சுமக்கச் சொல்பவன் அல்ல. கலாம் ஒரு மனிதர்; தலைவர். கலாம் சார், என் நிறைவேறாத ஆசைகளுள் உங்களைச் சந்திப்பதையும் ஒன்றாக இறைவன் சபித்து விட்டான். நீர் சொன்னது போல், கனவு காண்கிறேன், உங்களைப் போன்ற மனிதர்களை சந்திப்பதற்காக. நீர் வாழ்க ! எங்கள் மனங்களில். #RIP #APJAbdulkalam 
_ சத்தியசீலன் @ கிறுக்கல்கள்100

Wednesday, July 15, 2015

கொஞ்சம் சிந்தியவைகள்







ப்பிற்கான அளவுகோல் அவரவர் தகுதியைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகின்றது . 

ண்கள் பெண்களிடம் சொல்லும் அத்தனை மன்னிப்புகளும் தவறுகளுக்கானது அல்ல அன்பிற்கானது. 

இராமன்களுக்கு சீதையும், சீதைகளுக்கு இராமன்களும் எப்பொழுதும் கிடைப்பதில்லை.

விதைகள் திருடப்படும் பொழுதெல்லாம் காதல் பிறக்கின்றது.

னக்குத் தெரிந்த எல்லாவற்றையும் முழுமையாக சொல்லி விடாதே ! பிறகு, சொல்வதற்கு ஒன்றும் இருக்காது; கேட்பதற்கும் செவிகள் திறக்காது. 

ல்லோரும் கதாநாயகர்களாக வாழத்தான் ஆசைப்படுகிறார்கள். ஆனால், காலம் அவர்களை வில்லன்களாகச் சித்தரித்து விடுகின்றது . 

ங்கு இலவசமாய் கிடைக்க வேண்டியதெல்லாம் (கல்வி, மின்சாரம்,குடிநீர்) காசு கொடுத்தும், காசு கொடுத்துப் பெற வேண்டியதெல்லாம் ( தொலைக்காட்சி , மின்னம்மி, அரவைப்பொறி, மின்விசிறி, அரிசி ) இலவசமாய் கிடைக்கும். 
இப்படிக்கு 
தமிழக அரசு. 
c/o இந்திய அரசு.

காமம் திகட்டிப் போகும் சமயத்தில் காதல் பிறக்கிறது.

'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொன்ன பாரதி மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், தன் பேரனுக்கோ, பேத்திக்கோ, OC Category யில் PG Seat கிடைக்காமல் கல்லூரி கல்லூரியாக அலைந்திருப்பார். 

ரு மொழியோ, கவிதையோ, மனிதனோ, மனிதமோ, கடவுளோ, கலையோ கொஞ்சம் புரியவில்லை என்றால் அதனை உயர்வாகக் கருதும் மனப்பாங்கு எனக்கு எவ்வாறு தொற்றிக்கொண்டது? 


- சத்தியசீலன் @ கிறுக்கல்கள்100



Tuesday, September 2, 2014

மோதிரம்





சில பல காலங்களுக்கு முன்பு, புகைப்படங்களுக்குக் கவிதை எழுதி வந்தேன். அதை, ஞாபகம் வைத்து தோழி சரண்யா, இந்த புகைப்படத்திற்கு எழுதுமாறு கேட்டுக்கொண்டார். இதோ அது உங்கள் முன்னே !


னைக் காணா வேளையில் 
நான் கடிக்கும் ஆறாம் விரல் 
மோதிரம்.

மோதிரத்தின் வெற்றிடமாய் 
என்னுள்ளம் தானிருக்க ...
தினம் தினம் நிரப்புகிறாய் 
விரலால் ... விழியால் .. 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Thursday, August 21, 2014

இப்படிக்கு மருத்துவன்


குறிப்பு : நீயா நானா 17/08/2014 நிகழ்ச்சி கண்டு மனம் வெதும்பி எழுதியது. அரசியல் படுத்தாதீர்கள்.

ருத்துவர்களை மருத்துவம் பார்க்க விடாமல்
வாதாட அழைக்கிறது இந்த 'வக்கீல்' சமூகம்
பொருத்தது போதும் பேசி விடலாம்
என எத்தனித்தால் - ஓர் இருமல் சத்தம்
என்னைக் கலைத்து விடுகிறது
நுரையீரல் புற்றோ இல்லை
உடல் உருக்கும் காச நோயோ இல்லை
மழைக்கால சளி இருமலோ ?
Bronchoscopy ஓ? இல்லை
Sputum Smear ஓ? இல்லை
வெறும் Antibiotic ஓ ?
சொல்லலாமா ? வேண்டாமா ?
சொன்னால் நான் காசு பிடுங்குபவன்
சொல்லாவிடில் நான் மருத்துவம் படிக்காதவன்
நடப்பது நடக்கட்டும்
சொல்லிவிடுகிறேன்
இதையெல்லாம் செய்து விடுங்கள்; - ஆம்
எங்களைத் திட்டுவதற்காகவாவது நீங்கள்
உயிருடன் இருக்க வேண்டுமல்லவா ?
- இப்படிக்கு மருத்துவன்.

- சத்தியசீலன் @ கிறுக்கல்கள் 100 

Monday, July 28, 2014

இதுவும் கடந்து போகும் - ஒரு முறை பாடல்



முன் குறிப்பு: இது என்னுடைய முதல் பாடல் தமிழ்த் திரையுலகில். அதுவும், ஏ.வி.எம் என்னும் பெரிய நிறுவனத்தில். அந்த பாடல் வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ! இத்துடன் அப்படத்தின் சுட்டியை இணைத்துள்ளேன். 'ஒரு முறை' பாடல் இடம் பெரும் நேரம் 10.25 முதல் 15.40 வரை. உங்கள் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.



இசை : உமாசங்கர் 
வரிகள் : மரு.சத்தியசீலன்
இயக்கம்: அனில் மற்றும் ஸ்ரீஹரி பிரபாகரன்



படத்தின் சுட்டி : https://www.youtube.com/watch?v=UstJCj5r2dw

 தினம் தினம் ஒரு நொடி போதும் அன்பே
சிநேகம் உன்னோடு
யுகம் யுகம் நம் காதல் வாழும் பெண்ணே
எந்தன் கண்ணோடு

மொழியிழந்தேன் திரிந்தேன்
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
( ஹம்மிங் )

ரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே .... 
( ஹம்மிங் ) 

ன் தேடல் பிழை நீ 
மழை தேடும் முகில் நீ - நான் 
கிறுக்காத கவிதைகள் நீ 

ன் தோளில் விழும் நீ 
மடியில் எழும் நான் - உன் 
ஸ்பரிசங்கள் உயிர் தீண்டும் தேடல். 

ங்கு சென்றாலும் தள்ளி நின்றாலும் 
காதலில் உனை நனைப்பேன் 
நரைகள்  விழுந்தாலும்  பிறைகள் தேய்ந்தாலும் - உன் 
காலடி நான் கிடப்பேன்.
( ஹம்மிங் ) 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Related Posts Plugin for WordPress, Blogger...