Tuesday, October 30, 2012

சென்னை ! போடா வெண்ணை என்றது !

Copyright: mckaysavage@flickriver.com

முன் குறிப்பு : சென்னை மேல் அதீத அன்பு வைத்திருப்பவர்கள், இதய நோயாளிகள், இதுவரை சென்னை பக்கம் செல்லாதவர்கள் மற்றும் குறிப்பாக சென்னை வாசிகள் இதனைப்  படிக்காமல் தவிர்க்கமாறு கிறுக்கல்கள்100 சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பின்வரும் விளைவுகளுக்கு நிர்வாகமோ, நிர்வாக ஊழியர்களோ பொறுப்பல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ல மாடிக்கட்டிடங்கள், பிரமிப்பூட்டும் மால்கள், சொகுசு திரையரங்குகள் என தனக்கான இமேஜை காலம் காலமாக சென்னை தன்னுள்ளே தக்க வைத்து கொண்டிருப்பதில் எனக்கு துளியும் சந்தேகம் வராதவாறு தான் சென்னை இருந்தது !

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல , திருச்சி வழியாக செல்லாமல் , கும்பகோணம் வழியாக எனது பயணத்தை சொகுசுப் பேருந்தின் (?) ஓட்டுனரும் நடத்துனரும் முடிவு செய்து கொண்டிருந்தார்கள் ! கடைசியில் அத்தடம் வழியே பயணத்தைத்  தொடங்கினார்கள். 'உறக்கம் வராமல் இருந்தால் படி' என என் நண்பன் வாங்கிக் கொடுத்த ஆனந்த விகடன் எனது பையில் உறங்கிக்கொண்டிருந்தது ; எனக்கு உறக்கம் வந்ததால் . சென்னை பயணம் முடியும் வரை அதை நான் படிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்  ( பாஸ் உண்மையிலே சென்னை கொஞ்சம் பிஸி தான் ! )

காலை மணி 4 . இறங்கிய இடம் : தாம்பரம் . தங்குவதற்கென முடிவு செய்யப்பட்ட இடம் : நண்பன் இல்லம் . சேர் ஆட்டோவில் நண்பன் வீடு சென்றோம் ! நானும் என் நண்பர்களும் பின் வரிசையில்! முன்னர் மூன்று பேர் ; அதில் ஒரு இளவயது பெண். ஓட்டுனருக்கு அருகில் ஒருவர் என அடைக்கப்பட்டு அந்த வாகனம் சென்று கொண்டிருந்தது ! காக்பிட்டில் அமர்ந்திருக்கும் பைலட்டை காண்பிக்கும் போது சினிமாவில் ஒரு சாட் வைப்பார்களே, அது போல தான் எனக்கு ரோடு தெரிந்தது ! விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசையை சென்னை நிறைவேற்றியிருந்தது ! வழியில், கடமை தவறா காவல்துறை அவர் கடமையை செய்து கொண்டிருந்தார் ! எல்லாம் சரி வர சென்று கொண்டிருந்தது !

ருத்துவக் கழகத்தில் நான்  மருத்துவன் ஆகிய விசயத்தை காலை பத்து மணிக்கு பதிவு செய்த பின்பு சிறிது நேரம் இருந்ததால் ஸ்கை வாக் பக்கம் சற்று ஒதுங்கினோம் . இடையில் எனது தம்பியின் குறுந்தகவல் வேறு, " ஸ்கை வாக்கா ! ஜாலி பண்ணுனா " என . 'பீட்சா' பார்க்க போய்  ஏமாந்து நானும் என் நண்பனும் 'இங்கிலீஷ் விங்க்ளிஷில்' தஞ்சம் புகுந்தோம் . ஏற்கனவே அப்படத்தை நான் தமிழில் பார்த்திருந்ததால் ஹிந்தி என்னை அச்சப்பட வைக்க வில்லை . ஆனால் இன்றளவும் ஒரு இந்தியனாக இருந்து கொண்டு ஹிந்தி கற்கவில்லை என நான் வருத்தப்படவில்லை . காரணம் யாதெனில் சில மாதங்களுக்கு முன்பு தான் 'ஹாக்கி' நமது தேசிய விளையாட்டு இல்லை என சொன்னார்கள் ! இன்னும் சில மாதங்கள் கழித்து 'ஹிந்தி நம் தேசிய மொழி இல்லை என சொல்ல நேரிடும் ( அப்புறம் படிசுட்டோமேன்னு பின்னாடி வருத்தப்படக்கூடாதுல்ல  அதான் ).

 சரி , அது எல்லாம் இருக்கட்டும் நம்ம மேட்டருக்கு வருவோம் ! அங்கே தனியாக ஒரு பெண்ணை கூட பார்க்கவில்லை ! எல்லோர் பக்கத்திலும் அவர்களது பாடிகார்டுகள் ! கொடுத்து வச்ச மவராசனுங்க :) என்று முதலில் நினைத்துக்கொண்டேன் ! பின்னர் தான் , புரிந்தது அவர்கள் எல்லாம் அன்றைக்கு அறுக்கப்பட்ட ஆடுகள் என அவர்கள் டிக்கெட் வாங்க நின்ற பொழுது ! தூரத்தில் பார்க்க மட்டுமே சென்னை பெண்கள் அழகு ! ஓர் இருவரைத்  தவிர . ஒல்லியான ஒரு கல்லூரி பைங்கிளி ( சந்தோசப்பட்டுட்டு போகட்டும் போங்க ! ) தான் இன்னும் ஒல்லியாக தெரிவதற்காக டைட்டாக லெக்கிங்ஸ் அணிந்திருந்தாள் . இன்னும் சில பெண்கள் அங்கம் தெரியுமாரான ஆடைகள் , அளவுக்கதிகமான மேக் அப்புகள் என வலம்  வந்து கொண்டிருதார்கள். அதற்குள் என் நண்பன் 'மோமிடோஸ்' என ஒன்றை வாங்கி வந்தான். அதற்கும் எங்கள் வீட்டு காரகொழுக்கட்டைக்கும் எந்த வித்தியாசமும் என்னால் கண்டுபிடிக்க  முடியவில்லை . உண்மை சற்று கசக்கும் தான் ! இருந்தாலும் சொல்லியாக வேண்டுமே ! எங்கள் ஊர் ஸ்ரீரங்கத்துப்  பாவாடை தாவணிகளுக்கு இணையாக ஒரு ஜீன்ஸ் டாப்ஸை கூட என்னால் சென்னையில் பார்க்க முடியவில்லை !


டுத்த நாள் MGM ! பைக்கில் பயணம் . முகப்பூச்சு பவுடர் அடிக்காமல் வந்த எனக்கு, சென்னை போக்குவரத்துக் கழகம் இலவசமாக அந்த வேலையை செய்து கொண்டிருந்தது ! முகம் கழுவும் பொழுது தான் தெரிந்தது பல பேர் ஏன் ஆப்கான் தீவிரவாதிகள் போல முகம் மறைத்து செல்கிறார்கள் என!  வழி எங்கும் கட்டிடங்கள் ; அங்கே மனித உருவில் மக்கள்கள் நடந்து கொண்டிருந்தார்கள் ; அவர்கள் சிரிப்பை மறந்திருந்தார்கள்; வேலைக்கென செய்யப்பட்ட ரோபோக்கள் போல தான் அவர்கள் என் கண்களுக்கு தென்பட்டார்கள். அந்த தீம் பார்க்கில்  சில பல விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன பராமரிப்பு காரணமாக ! இருந்தாலும், கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  என் நண்பன் நல்ல காத்து வருதா ( பிகருகலைத் தான் அவன் அப்படி சொல்வான் ) என நீண்ட நேரம் காத்திருந்து, தீம் பார்க் முழுதும் அலைந்து திரிந்து அலுத்திருந்தான். பின்னர் தான் தெரிந்தது நல்ல காற்று வீக் எண்ட்ல அடிக்காதாம் ! 500 ரூபாய் என்னுடைய நஷ்டக் கணக்கில் ஏற்றப்பட்டது !

மாலை பள்ளி நண்பனின் சந்திப்பு ! நண்பர்களை, மனிதர்களை நாம் எந்த வயதில் சந்திக்கிறோமோ அவர்கள் வயதானாலும், அந்த வயதில் இருப்பவர்களாகவே நம் மனது ஏற்றுக்கொள்கிறது. என் நண்பனை நான் பன்னிரெண்டாவது படிக்கும் மாணவனாகத்  தான் பார்த்துக்கொண்டிருந்தேன்; அவன் சென்னை ஐ.டி  புழுதியில் மறைந்து விட்ட ஒரு துகள் என்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மறுபடியும் அன்றிரவு 'பீட்சா' விற்கு முயற்சி செய்து தோல்வியை சந்தித்தோம். அட போங்க பாஸ் ! உங்க ஊர்ல படம் பாக்குறதுக்கு சும்மாவே இருக்கலாம் ! கடைசியாக எல்லாம் முடிந்த பின்பு, மனிதம் நிறைந்த மனிதர்கள் குறைவு என்பதை உணர்ந்த பின்பு , அடுத்தவர்களை மிக எளிதாக காயப்படுத்தும் உறவுகள் உண்டு என்பதை அறிந்த பின்பு, என் சுவாசம் நோக்கி பயணமானேன் ! பேருந்தில் ஏறி அமர்ந்த பின்பு  விவேக்கின் வசனம் 'சென்னை ! போடா வெண்ணை என்றது ! ' என்பது தான் என்  ஞாபகம் வந்தது .

து சென்னை மக்களுக்கு மட்டும் :
( ஆம் அல்லது இல்லை என பதில் அளிக்கவும் )

1.சென்னை பிடித்திருக்கிறதா ?
2.பணம் மட்டும் தான் வாழ்கையா ?
3.நல்ல காற்றை எப்பொழுது கடைசியாக சுவாசித்தீர்கள் ?
4.நீங்கள் சிரிப்பீர்களா?
5.தீம் பார்க், மால், பப்புகள் தவிர உங்கள் சந்தோசத்தை இரட்டிப்பாக்கும் இடங்கள் சென்னையில் இருக்கின்றனவா ?


பின் குறிப்பு : இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டவையல்ல ! என் மனம் புண்பட்டதால் எழுதப்பட்டவை !
கொசுறு தகவல்:  26/10/2012 முதல் நான் பதிவு பெற்ற அரசு மருத்துவர் !


- சத்தியசீலன்@கிறுக்கல்கள் 100




8 comments:

  1. எல்லாம் சரி, நீங்க எந்த கிராமத்தில் இருந்து சென்னை வந்தீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் இப்பொழுது அனைத்து நகரங்களிலும் திருச்சி உட்பட நடக்கிறது, பெங்களூரு சென்று பாருங்கள் சென்னை எவ்வளவு தேவலாம் என்று தெரியும் !! இதெல்லாம் இப்போ Fashion, Free ah விடுங்க :)

    ReplyDelete
    Replies
    1. " Fashion " அது எல்லாம் சரி தான் ! எல்லா ஊர்களிலும் அப்படி நடக்கிறது,வாஸ்தவம் தான் இருந்தாலும் முழுமையாக ஒப்புக் கொள்ள இயலாது ! ஆனால், சென்னை தான் அதை மற்ற ஊர்களுக்கு கற்றுத் தருகிறது ! அதில் மாற்றுக் கருத்து இல்லை . பாஸ் சென்னை பற்றி தானே சொன்னேன் ! நீங்க இதுக்கு எல்லாம் கோவப்படாம ப்ரீயா விடுங்க பாஸ் !

      Delete
  2. 26/10/2012 முதல் நான் பதிவு பெற்ற அரசு மருத்துவர்//வாழ்த்துக்கள் மருத்துவரே... ஒரு ரெண்டு நாளில் சென்னை அந்த அளவு படுத்தி எடுத்து விட்டதா என்ன? கூட கொஞ்ச நாள் இருந்தீங்கன்னா சென்னை உங்களுக்கு மட்டுமல்ல இருக்கும் அனைவருக்கும் பிடித்து விடும். சென்னையின் ராசி அப்படி.... உங்களின் முதல் கேள்விக்கு பதில் சென்னையில் கொஞ்ச காலமேனும் இருந்த அனைவரும் "ஆம்" மிகவும் பிடிக்கும் என்றே சொல்வார்கள்.. அப்படியே அந்த "word verification" எடுத்து விடுங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் போல ! எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது !

      Delete
  3. 1.yes,soooooooooo much
    2.no.
    3.even this minute
    4.yes.
    5.yes, my home and so many places
    From regd medical practitioner 1989

    ReplyDelete
  4. 1.yes romba pidikum chennai pola vera place engum illa
    2.if money is not there is no life, money irudha thaane sapta mudiyum adhuku money venum adhuku work venum idhula illama soru va va na varuma ,neega unnnga orula one day oru one rupees vechukitu one day unngala spend pana mudiyuma solluga neega doctor thaane all people free service panuga? chennai people ku matum than money innu life aa run panala all human running for this moeny oru vela saptu ku money venum pa
    3.alwz i get fresher breeze in my house
    4.o s romba nala sirippan eeeeeeeeeeeeeeeeee can c my alll teeth,chennai people can smile well naga onnum alien illa boss.
    5.ya lots of places their neega one day chennai vaindhutu pathadhu vechu sollurega boss chennai avalo easy ya judge panitga chennai mylapore Kapaleeshwarar Temple poe paruga boss neega keta நல்ல காற்று 2 பாவாடை தாவணி pakalam ,marina beach and besant nagar beach poe paru morning 5 to 6 evening 6 to 7 oru azhgana vaasam mula kathum adha sun rayz,avalo yen boss unnga friend vituladhu motta maadi la poe paruga chennai avalo azhgu inuu unnga kannu sollum .
    chennai ponnuga fashion thaan i will agree 20% girls pathudu whole girls apdi innu think pani sona yapdi nagalum chennai ponnu thaan chennailayum decent aa saree,chudi potu kitu anna,thambi,apa ipadi relations kooda mattum spend panura ponnugalum chennai la irukaga boss .chennai pathi thaane solluran adhuku neega yen kovam paturega innu ketu yapdi chennai makal la nagalum varum la இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டவையல்ல என் மனம் புண்பட்டதால் எழுதப்பட்டவை
    happy happy boss

    ReplyDelete
  5. தூரத்தில் பார்க்க மட்டுமே சென்னை பெண்கள் அழகு ! ஓர் இருவரைத் தவிர
    small request wat ever place u going don;t say abt girls bcoz neega pasaga problem illa chennai ponnuga ipadi apdi innu yaro sonadhu vechu today eavlo guys from other place who looking for wedding chennai ponnu sona oduraga thapa pakuraga adha thapana paruvai sari innu solluradhu pola unngaladhu sela varathaigal iruku pidikala ennku idhu word nanum chennai ponnu thaanga today also na girl ku vechu iruka rules oda thaan vazhguran my first kiss,my first hug my first dating to my future husband oda thaan innu oru gentle rules la thaan i'm running my life en family apdi engala valathu irukaga here i like to dedicate engeyum eppothum chennai pathi adha hero sonadhu neega innum kekala pola keluga boss

    ReplyDelete
  6. உங்கள் அனைத்து வினாக்களுக்கும் 'சென்னை போடா வெண்ணை என்றது - பகுதி 2'இல் பதில் சொல்கிறேன் !தோழி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...