Monday, December 19, 2011

விடைபெறுகிறேன் !



ன்று உனக்கும் எனக்கும் விவாகரத்து
நான் மட்டும் கண்ணீரோடு...
நீ என்றுமே பெருமிதத்தோடு.

ந்தேன். வசந்த நாளில் - உன்
வாசல் தேடி....
வாரி அணைத்து
வரவேற்பு செய்தாய்
விவாகரத்து விரைவில் என்று சொல்லாமலே !!

ன்னால் தானடி - என்
பெற்றோரை பிரிந்தேன்
உன்னால் தானடி - என்
உறவுகள் மறந்தேன்
உன்னால் தானடி - என்
கனவுகள் மலர்ந்தேன்
உன்னைத் தானடி
உண்மை சொல்லேன்?

திருமணத்தன்றே தப்பிக்கலாம் - என்று
நினைத்தேன்
உன் அழகால் என்னை
அடைத்து விட்டாயடி - என் நினைவை அன்றே
அழித்து விட்டாயடி

முதல் இரவு
உன்னுடன் உறங்காமலே ...
சில இரவு
உன்னோடு பேசாமலே...
பல இரவு
உன்னோட பாசத்திலே...

றவுகள் பல தந்தாய்
உணர்வுகள் பல தந்தாய்
உரிமைகள் பல தந்தாய் - இன்று
"உதறிவிட்டு செல்" என்கிறாய் .

நான் ஆணென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்;
நான் நானென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்.

காதலைக் கற்று தந்தாய்
கவிதைகள் கற்று தந்தாய்
கல்வியைக் கற்று தந்தாய்
கலையையும் கற்று தந்தாய்
கடைசியில் ஏனடி கழட்டிவிட்டு செல்கிறாய்?

ன்னைச் சேர்ந்த ஒவ்வொரு நாளும்
உதிரம் உலையாய் கொதித்ததடி - இனி
உன்னைப் பிரியும் ஒவ்வொரு நாளும்
உதிரம் பணியை உறையுமடி

ப்படி என்னடி செய்துவிட்டேன் - படித்தேன்
உன்னைப் படித்தேன்
படிப்புக்கு தண்டனை பிரிவா?

முதல் முத்தம் தந்து என்னை நீ அழைத்தாய் - இதோ
இறுதி முத்தம் தந்து உன்னை நான் அழைக்கிறேன்
வந்துவிடு என் வாசல்தேடி
வரமாட்டாய் - நீ நிச்சயம்
வரமாட்டாய்
ஈழத்தைக் காக்க இந்தியன் வருவானா?

வி
டைபெறுகிறேன்...
உன் குழந்தையோடு - இல்லை இல்லை
நம் குழந்தையோடு.

ய்! கல்நெஞ்சக்காரி , இப்பொழுதாவது கூறடி
யாரடி வைத்தது - உனக்கு
"கல்லூரி" என்ற பெயரை




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

6 comments:

  1. நல்லாயிருக்கு ஆரம்பத்தில் இருந்து படிக்கும் போது மனதில் இருப்பது வேறொன்று இறுதியில் எதிர்பார்க்காத ஒரு முடிவில் முடித்திருக்கிறீர்கள்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. this's an interesting and lovely poem,i really like this poem and from now,i'm your fan satyaseelan

    ReplyDelete
  3. இறுதியில் கலக்கிவிட்டீர்கள்!!

    ReplyDelete
  4. நான் மட்டும் கண்ணீரோடு...
    நீ என்றுமே பெருமிதத்தோடு.

    "கல்லூரி" என்ற பெயரை இணைத்து மனதில்
    பசுமை நிறைந்த நினைவலைகளை பதித்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...