Friday, July 1, 2011

நீயும் வீணே !

COPYRIGHT : Carol VanHook


ன்னில் பெரியவனும் இல்லை;
உன்னில் சிறியவனும் இல்லை.
உறுப்படியான இவ்வுலகில் உனக்கு
உறுப்படியாய் எதுவும் இல்லை.

பிறப்பது ஓர் நாள்
இறப்பது ஓர் நாள் -மற்றவை 
எல்லாம் உன் வாழ்நாள்.
பிறக்கையில் பிறந்தாய்
இறக்கையில் இறந்தாய்
இருப்பதில் என்ன இழந்தாய்.

கொடுக்காத கை வீணே ! - கொடுப்பதைக் கண்டு
ரசிக்காத கண் வீணே !  
சிரிக்காத முகம் வீணே - பிறரை 
அணைக்காத நீயும்  வீணே !

ர்ணன் பற்றிப் பேசுகிறாய் 
கடையேழு பற்றி பேசுகிறாய்
காலம் காலமாய் பேசுகிறாய்
கொடுப்பதில் மட்டும் யோசிக்கிறாய்

பிச்சை இட்டவன் இறைவன் 
பிச்சை பெற்றவன் மனிதன்
பிச்சை கேட்பவன் "மனிதன்"
பிச்சையிட்டால் நீ இறைவன்.

மாறுமோ உன் மனம்!
தீறுமோ தீ குணம்!
சேருமோ நல் மனம்!
வாய்க்குமோ விண் குணம்.




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
 

10 comments:

  1. //பிறக்கையில் பிறந்தாய்
    இறக்கையில் இறந்தாய்
    இருப்பதில் என்ன இழந்தாய்.//

    கலக்கல்ஸ்,அனைத்துமே அருமை..:-))

    ReplyDelete
  2. @Bavan Nanri Bavan ! Ellam ungal Aasirvaadham dhaan

    ReplyDelete
  3. ////
    பிச்சை இட்டவன் இறைவன்
    பிச்சை பெற்றவன் மனிதன்
    பிச்சை கேட்பவன் "மனிதன்"
    பிச்சையிட்டால் நீ இறைவன்.

    //////


    ஆனால் தற்போது யாரும் இறைவனாக விரும்பவில்லை....

    ReplyDelete
  4. அழகிய கவிதை வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. அருமை. வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. மிகவும் அருமையான கவிதை தோழா.
    சிறு சந்தேகம்
    ~*~கொடுக்காத கை வீணே! - அதைக்கண்டு
    ரசிக்காத கண் வீணே!~*~ என்று எழுதியுள்ளீர்கள் கொடுக்காத கையை எதர்க்காக ரசிக்க வேண்டும். எனக்கு புரியவில்லை.
    நான் தவறுதலாக புரிந்துகொண்டிருந்தால் மன்னிக்கவும். விளக்கம் கொடுத்தால் நல்லது.
    நன்றி தோழா.

    ReplyDelete
  7. @ராஜா MVS தவறு தான் தோழா ! கொடுப்பதைக் கண்டு என மாற்றிக் கொள்கிறேன் !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...