Tuesday, June 14, 2011

ஏனடி ! இப்படி அழகானாய் ?

Copyright : http://safa.tv


னடி ! இப்படி அழகானாய் ?
அழகால் என்னைத் தின்கின்றாய்.
சொல்லடி அன்பே ஆருயிரே!
சாகவும் தோணுதே காதல் தானோ! ( பல்லவி )

ரைநொடி வாழ்தால் கூட - உன் 
அரவணைப்பில் வாழ வேண்டும் .
அடுத்தநொடி இறந்தால் கூட - உன்
மடி மீது நான் சாக வேண்டும்.  ( சரணம் - 1 )

பிரம்மன் செய்த பிழையோ- நீ
பெண்கள் கூட்டத்துத் தேவதையோ ! - என்
உயிரைக் குடிக்கும் மோகினியோ - பலர்
உயிரைக் காக்கும் தேவதையோ. ( சரணம்  -  2  )

சிரிக்காமல் சிரிப்பது எப்படியோ! - என்னுயிரைக்
குடிக்காமல் குடிப்பது எப்படியோ!
அழுகின்ற பொழுது அணைத்திடடி - நான்
அணைக்கின்ற பொழுது அச்சம் தவிர்த்திடடி. ( சரணம் - 3  )

கிறுக்கன் என்னைக் கவிஞனாக்கினாய் ;
கவிஞர்கள் பலரைக் கிறுக்கனாக்கினாய்.
அழகைக் கொண்டே ஆளைக் கொல்கிறாய்;
அகிம்சைக் கொள்கை ஏற்க மறுக்கிறாய்.    ( சரணம் - 4  )

முத்தம் கேட்டு முயன்றிடவில்லை -உன்னை
நித்தம் பார்க்க முறையிடவில்லை.
சத்தம் இன்றி நுழைந்தாயே - என்னை
நித்தம் நீயே வென்றாயே ! ( சரணம் - 5  )

 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



3 comments:

  1. அசத்தல் கவிதைகள்.. படிக்கும் போதே மனதை ஏதோ செய்கிறது..

    ReplyDelete
  2. நல்ல கவிதை
    காதலின் கனத்தையும் -அது
    காத்திருக்கிற கணத்தையும்
    காதலாய் சொன்ன விதம் அருமை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...