Tuesday, April 5, 2011

அன்புள்ள ஆசானுக்கு !


Photo Courtesy - surajsanap.wordpress.com


ன்புள்ள ஆசானுக்கு,
அன்பு ததும்பும் வார்த்தைகளோடு – உங்கள்
மாணவன்.
பிழையிருந்தால் மன்னிக்கவும்;
பிடித்திருந்தால் விமர்சிக்கவும்.

ப்பனுக்கும் ஆத்தாளுக்கும் அப்புறமாய்…
அதிகமாய் வசைபாடியது நீங்கள்தான்.
அப்பொழுது நாங்கள் கண்டுக்கொள்ளவில்லை
அப்புறம் தான் தெரிந்தது;
அறிவிற்கு புரிந்தது.
அத்தனையும் அன்பின் வெளிப்பாடு – நான்
அறிந்தேன் உலகை ஆசானோடு.

வேர்கள் கண்ணில் தெரிவதில்லை
விழுதுகளை நம்பி அவை வாழ்வதில்லை.
வேர்கள் தாங்கள்;
விழுதுகள் நாங்கள்.

நாங்கள்
முன்னேறும் பொழுதெல்லாம்
முழுஉலகமும் பொறாமைப்படும்
முதல்வகுப்பு ஆசான் தான்
முன்னின்று பெருமைப்படுவார்.

ங்களை வைத்து உலகம் அறிந்தோம்
உங்களை வைத்து உலகம் படித்தோம்
உங்களை வைத்து உலகம் நினைத்தோம்
உங்களுக்காக புதுஉலகம் படைப்போம்.

யிரம் பள்ளிகள் கட்ட வேண்டாம்
அரைகோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டாம்
அத்தனை புண்ணியங்களும் – உங்கள்
அன்பு அதட்டலில்.

நீங்கள் பிரிகிறீர்கள்
உங்கள் பணியிடமிருந்து- ஆனால்
நாங்கள் பிரிகிறோம்
எங்கள் உயிரிடமிருந்து.

னக்கு ஒரு ஆசை
விபரீத ஆசை தான்.
விட்டில்பூச்சி நினைத்ததாம்
விண்மீன் ஆகவேண்டுமென்று
இதுவும் அது போன்று தான்.
ஒரு முறை பிறந்திட வேண்டும்
ங்களுக்கு முன்னால்…

ரு முறை அணைத்திட வேண்டும்
உங்களுக்கு அன்னையாய்…
ஒரு முறை மலர்ந்திட வேண்டும்
மனிதநேயம் கொண்ட மனிதனாய் ….
ஒரு முறை சிரித்திட வேண்டும்
சின்னஞ்சிறு மழலையாய்….
மொத்தத்தில்
ஒரு நாள் வாழ்ந்திட வேண்டும்
உங்களுக்கு ஆசானாய்.

ரேயொரு வேண்டுகோள்
என்றேனும் ஒரு நாள்
எங்கேனும் ஓரிடத்தில்
உங்கள் மாணவன் என்று நான் அறிமுகம் செய்கையில்
ஒரு முறையேனும் கேட்பீரோ?
” டேய்! ராஸ்கல் எப்படிடா இருக்க?” .



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100






4 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...